வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தயார்- அதிபர் ட்ரம்ப்

ஜோ பைடன் வெற்றியாளர் என தேர்வாளர்கள் குழு அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

Donald Trump

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றவர் பைடன் தான் என தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தா நிச்சயம் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன். ஆனால் வரும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள ஜனவரி 20ஆம் தேதி பல்வேறு விசயங்கள் நடைபெறும். வாக்களிக்கும் உட்கட்டமைப்பில் மூன்றாவது உலக நாடு போல் அமெரிக்கா உள்ளது. ஹேக்கிங் செய்ய கூடிய கணினிகள் அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன

அதிபராக பைடனை எலக்டோரல் காலேஜ் தேர்வு செய்தால் அது பெரிய தவறாகிவிடும். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு 43 டாலர்கள் சன்மானம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter