அதிபர் தேர்தலை ஏன் தள்ளி போட கூடாது? – ட்ரம்ப்

அதிபர் தேர்தலை தள்ளி போடலாமா என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வினவியிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில்முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. ஆனால் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் மக்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் சூழல் உருவாகும் வரை தேர்தலை ஏன் தள்ளி போட கூடாது என ட்ரம்ப் டிவிட்டரில் வினவியுள்ளார். இந்த காலகட்டத்தில் தேர்தலை நடத்தினால் அதில் பல முறைகேடுகள்நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

இதனை நிராகரித்துள்ள குடியரசு கட்சியை சேர்ந்த மிட்ச் மெக்கானெல் மற்றும் கெவின் மெக்கார்த்தி, தேர்தல் தேதியை மாற்றுவதற்கு பிரதிநிதிகள் மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அதிபர் ட்ரம்பிற்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர். அதுமிட்டுமின்றி, தேர்தலை ஒத்திவைக்க ஜனநாயக கட்சியினர் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் குடியரசு கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். தபால் ஒட்டு முறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது என்றும் அதிபர் ட்ரம்ப் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவருகிறார்.

இதையும் படிக்கலாமே: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகிறார் இந்திய வம்சாவளி?