அமெரிக்காவை அதிரவைக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களின் போராட்டம்!

protest

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றார்.

270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தாலும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடக்கவில்லை என பல்வேறு மாகாண அரசுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. தேர்தலில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனக்கூறிய தேர்தல் அதிகாரியும் அதிபர் ட்ரம்ப் பதவிநீக்கம் செய்தார்.

Will Trump's refusal to concede help his base turn out in Georgia's  runoffs? | US elections 2020 | The Guardian

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பைடன் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், வாக்குகளை திருடாதீர்கள் என போராட்டத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் பல்வேறு இடங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டதால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

இதையும் படிக்கலாமே: ஜோ பைடனை பாதுகாக்கும் “ஜில்லு”… யார் இந்த ஜில் பைடன்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts