கண் முன்னே எங்கள் நாட்டை அழித்துவிட்டனர்- ட்ரம்ப்

Trump’s

கொரோனா தொற்றால் ஏற்பட்ட சேதத்துக்கு சீனா இழப்பீடு தர வேண்டுமென அதிபர் ட்ரம்ப் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

Donald Trump Urges Nations To Demand Reparations From China Over Covid

இந்நிலையில் வட கரோலினாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், “கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்புகளை சந்தித்த உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் பணத்தை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்த வேண்டும்.

சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் நாடுகள் அதை திருப்பி கொடுக்க கூடாது.

அனைத்து சீன தயாரிப்புகளுக்கும் 100 சதவீத கட்டணத்தை விதிக்க அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய அதிபர் ஜோ பைடன் சீனாவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

முதல் கட்டமாக, அனைத்து நாடுகளும் கொரோனா இழப்பீடுகளை ஈடுசெய்வதற்காக சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனை ரத்து செய்ய வேண்டும்.

உலக நாடுகள் இனி சீனாவுக்கு கடன்பட்டிருக்கக்கூடாது. சீனா பல நாடுகளை அழித்துவிட்டது.

சீனாவே உலக நாடுகளுக்கு கடன்பட்டிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.