அதிபர் தேர்தலில் வாக்களித்தார் ட்ரம்ப்!

Trump

உலகமே ஆர்வமுடன் உற்றுநோக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் பரப்புரைகளும் முன்னேற்பாடுகளும் தடைபடவில்லை.

அமெரிக்கா அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகனும், ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமாவும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் 3ம் தேதிதான் என்றாம் Early Vote என்ற அங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவு நாளன்று நீண்ட கியூவில் வாக்காளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், முன்கூட்டியே வாக்களிக்கவும் வசதி உண்டு. புளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒரு வீடு உள்ளது. எனவே, புளோரிடாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ட்ரம்ப் வாக்களித்தார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “நான் ட்ரம்ப் என்ற ஒருவருக்கு வாக்களித்தேன்,” என்று சிறு புன்னகையுடன் தெரிவித்தார். தற்போது வரை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இமெயில் மூலமாக வாக்குகளை பதிவு செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ட்ரம்ப். இந்த நிலையில்தான் ட்ரம்ப் நேரடியாக, வாக்குச்சாவடிக்கு சென்று அனைவரும் நேரில் வாக்களிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இருப்பினும் கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் தபால் மூலம் வாக்களிக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக ட்ரம்ப் கூறிவருகிறார்.

இதையும் படிக்கலாமே:  கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter