தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து செயல்பட தயார்- அதிபர் ட்ரம்ப்

வெற்றிகரமான கொரோனா தடுப்பூசியை தயாரிக்க சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 39 லட்சத்து 97 ஆயிரத்தும் மேற்பட்டோற் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும். வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் கொரோனா தொடர்பான உண்மையை சீனா மறைத்ததே உலகலாளவிய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து பணியாற்றத் தயாரா என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் யாருடன் வேண்டுமானாலும் அமெரிக்கா இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், கொரோனா சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa