புதிய வலைதளத்தை தொடங்கிய ட்ரம்ப்!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு, வன்முறையை தூண்டுவதாக ட்ரம்பின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump) கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. உடனே @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

பின்னர் அந்த கணக்கும் முடக்கப்பட்டது. அதிபர் பதவியை சுமுகமாக பரிமாற ஒத்துழைக்க மறுக்கும் ட்ரம்ப், மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

trump

மேலும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்ட அனைத்து ட்வீட்களும் நீக்கப்பட்டன. முன்னதாக ட்ரம்பின் ஃபேஸ்புக், ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மற்றும் அதிபரின் கணக்கு ஆகியவற்றை முடக்கிய ட்விட்டர் நிறுவனம் பேச்சு உரிமைக்கு தடையாக இருப்பதாகவும், தன்னை அமைதியாக இருக்க செய்வதற்காக கணக்கை முடக்கியிருப்பதாகவும் சாடினார்.

சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி தான், புதிதாக ஒரு சமூக வலைதளத்தை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கடந்த சில வாரங்களுக்கு முன் ட்ரம்ப் விரைவில் தனக்கென சொந்தமாக இரு சமூக ஊடகத்துக்கான தளத்தை தொடங்குவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் புதிதாக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் ட்ரம்பின் பதிவுகளுக்கு லைக் செய்ய முடியும், கருத்து தெரிவிக்க முடியும், மேலும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரமுடியும்.