இந்தியாவுக்கு யோசனை சொல்லும் அமெரிக்க மருத்துவர்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

Shut Down Country for Few Weeks, Build Makeshift Hospitals Like China: Dr  Fauci on India's Covid Crisis

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

ஒரு படி மேலே போன ஆஸ்திரேலியா, இந்தியாவிலிருந்து வருவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி பாசி அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், “இந்திய அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

கொரோனா வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் சில வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம். 6 மாத காலங்களெல்லாம் ஊரடங்கை பிறப்பிக்க அவசியம் இல்லை சில வாரங்கள் பிறப்பித்தால் போதும்.

ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை பிற நாடுகளிலிருந்து பெற்று மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

அதேபோல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியை பெற முடியுமோ அதனை பெற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் கொரோனா போரில் வென்றுவிட்டோம் என அவசரப்பட்டு இந்தியா அறிவித்துவிட்டது” என விமர்சித்தார்.