விஸ்கான்சினில் துப்பாக்கிச்சூடு; 8 பேர் படுகாயம்

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

மில்வாக்கி நகரில் உள்ள மேஃபேர் வணிக வளாகம் முன்பு துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

உடனடியாக அங்கிருந்த மக்கள் தெறித்து நாலாப்புறமும் சிதறி ஓடினர். சுமார் 3 மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபருக்கு 20 முதல் 30 வயது இருக்கும் என்றும், அவர் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டால் மால் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8 முதல் 12 குண்டுகள் வெடித்த சப்தம் கேட்டதாக மாலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கிச் சூடு அருகிலேயே நடந்த போதிலும் அதை சுட்டவர் யார் என தெரியவில்லை என்றும் துப்பாக்கி சூடு சப்தம் கேட்டவுடன் அனைவரும் கீழ்தளத்திற்கு சென்று விட்டதாகவும் மாலில் இருந்தவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை காவல்துறையினர் தேடிவருகின்றார். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகிவருகின்றன.

இதையும் படிக்கலாமே: கொரோனாவால் நிமிடத்துக்கு ஒரு அமெரிக்கர் உயிரிழப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter