அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்தல் அதிகாரிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், வாக்குகள் தொலையவோ, மாற்றப்படவோ இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 5 தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.

குடியரசு கட்சியின் கோட்டையாக விளங்கும் ஜார்ஜியாவில் நேற்று வரை அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தார். திடீரென நேற்று இரவு ஜார்ஜியாவில் பைடன் முன்னிலைக்கு வந்தார்.

எனினும், ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றதையடுத்து ஜோ பைடன் பெரும்பான்மையை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற மொத்தம் 270 வாக்குகள் தேவை. பென்சில்வேனியாவில் வெற்றிபெற்றதன் ஜோபைடன் வெற்றிப்பெற்றதால் 284 வாக்குகள் பெற்று பைடன் அதிபரானார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப், ஜோ பைடன் வெற்றியாளராக பொய்யாக காட்டிக் கொள்வதாகவும், தேர்தல் முடிவடைவதற்கான காலம் வெகு தொலைவில் உள்ளதாகவும் கூறிவருகிறார்.

US presidential elections

இந்நிலையில் அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு முறையிலும் எந்த முறைகேடும் நேரவில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் தேர்தல் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் இதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த 3ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் என்று கூறியுள்ள அதிகாரிகள், தேர்தல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளனர். இதற்கான அறிக்கையில் தேர்தல் உதவி ஆணையத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: பைடனுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அலைகழிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter