சாப்பிடும்போது முகக்கவசம் ஏன் அணியவில்லை? விமான பணிப்பெண் தொல்லை

mask

அமெரிக்காவில் சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைக்கு முகக்கவசம் அணியாததால் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை அந்த குழந்தையுடன் சேர்த்து விமானத்தைவிட்டு வெளியேற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

அந்த வீடியோவில், முகக்கவசம் விதியை மீறியதால் உடமைகளை எடுத்துக்கொண்டு விமானத்தைவிட்டு வெளியேறுமாறு கர்ப்பிணி பெண்ணிடம் கூறுகிறார்.

காரணம் கேட்டபோது, கர்ப்பிணி பெண்ணின் மடியில் அவரது முதல் குழந்தை அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தது.

சாப்பிடும்போது அந்த குழந்தை முகக்கவசம் அணியவில்லை. இதனை காரணமாக காட்டி அந்த பணிப்பெண் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினரை விமானத்தைவிட்டு இறங்க கூறினார்.

விமானத்தைவிட்டு இறங்குங்கள்… இல்லையென்றால் நான் போலீசாரை அழைப்பேன் என விமான பணிப்பெண் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டுகிறார்.

இதனை கேட்ட கர்ப்பிணி பெண் விமானத்தைவிட்டு இறங்க முடியாது என திட்டவட்டமாக கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து விமானத்தைவிட்டு வெளியேறிய கர்ப்பிணி பெண்ணின் குடும்பம், புதிய விமானத்தில் ஏறி சென்றனர்.