அதிபர் தேர்தல்: அனல்பறக்க நடைபெற்ற இறுதி விவாதம்

Trump- biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக ஜோ பிடனும், ரஷ்யாவிலிருந்து பைடன் பணம் பெற்றுவிட்டதாக ட்ரம்ப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 11 நாட்களே இருக்கும் நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான இறுதி விவாதம் டென்னிஸ் மாநிலத்திலுள்ள நாஷ்வில் நகரில் நடைபெற்றது.

விவாதத்தை என்பிசி செய்தியாளர் கிறிஸ்டவன் வெல்கர் தொகுத்து வழங்கினார். முதலில் கொரோனா பரவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, அரசு எடுத்த நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பபதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால் கொரோனா பரவலை தடுக்க ட்ரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த அரசு அதற்கு மாற்றாக எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை என்றும் ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.

ஊரடங்கால் அமெரிக்காவே மயான நகரமாக மாறியது என தெரிவித்த ட்ரம்ப், வேலையிழப்பால் பலர் தற்கொலை செய்து கொண்டதாலேயே தளர்வு வழங்கப்பட்டதாக வாதிட்டார்.

அதிபர் ட்ரம்பால், அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்துவிட்டதாக பிடன் சாடினார்.

மோசமாக இருந்ததாலேயே ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்ததாகவும் அதற்கு மாற்றாக சிறப்பான மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும் எனவும் ட்ரம்ப் பதிலடி கொடுத்தார்.

US Election 2020 Live Updates: Donald Trump vs Joe Biden Debate Live, US Presidential Elections 2020 Polls Date, Latest News, Highlights

பிடன் கொண்டுவந்த திட்டங்களால் கருப்பின மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பினத்தவர்களுக்கு நன்மை செய்தது தான் மட்டுமே எனவும் ட்ரம்ப் தற்புகழாரம் சூடிக்கொண்டார். அதிபர் ட்ரம்ப் வரியே முறையாக செலுத்தவில்லை என்ற பிடனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ட்ரம்ப், முன்கூட்டியே கோடிக்கணக்கான தொகையை வரியாக செலுத்திவிட்டதாகவும், விரைவில் வருமான வரி கணக்கை வெளியிடுவேன் எனவும் கூறினார். ஜோ பொடன் குடும்பமே தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பாதிப்பதாகவும், ரஷ்யாவிடமிருந்து பணம் பெற்றுவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். இதனை கேட்ட பிடன், ட்ரம்ப்தான் சீனாவில் வங்கிக்கணக்கு வைத்துக்கொண்டு அந்நாட்டிடமிருந்து பணம் பெற்றதாக பரஸ்பர குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதிபர் ட்ரம்ப்- ஜோ பிடன் இடையிலான முதல் விவாதத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே இருவரும் அடிக்கடி குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று 90 நிமிடங்கள் நடைபெற்ற விவாதம் முழு ஆரோக்கியமானதாக இருந்ததாகவும், சுமூக விவாதமாக இருந்ததாகவும் அமெரிக்க அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விவாதத்தின்போது ட்ரம்பை, பிடன் ‘திஸ் கை’ (this guy) என அடிக்கடி அழைத்ததாகவும், கமான் (Come on) என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ட்ரம்பிடம் பேசுவதை சோர்வாக உணர்ந்த பிடன், எப்போது விவாத நேரம் முடியுமென்பதை, கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்தப்படி உடல்மொழியால் வெளிக்கொணந்தார்.

இதையும் படிக்கலாமே: சீனாவில் வங்கிக்கணக்கு வைத்துக்கொண்டு அங்கு வரி செலுத்தும் ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter