அமெரிக்காவை தாக்கிய இந்திய கொரோனா வைரஸ்

corona

அமெரிக்காவில் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால் இருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

coronavirus

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பல்வேறு உலக நாடுகளில் தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த மாதம் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், அமெரிக்காவின் வட கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீச தொடங்கியிருப்பதால் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளாது.