அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு!

Shooting

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதேபோல் இந்தமாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

Louisiana Shooting is 5th Mass Killing in 10 Days

கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் லூசியானா மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவருக்கு சம்பட இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை.