முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!சாப்பாட்டுக்காக உயிரைவிடும் அமெரிக்கர்கள்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புளோரிடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் புளோரிடாவின் மார்ட்டின் நகரில் முகக்கவசம் அணிய மறுத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிய வற்புறுத்தாதீர்கள், முகக்கவசம் அணிவதும் அணியாமல் இறுப்பதும் தங்களின் தனிப்பட்ட விருப்பம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தெருவில் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Hotel

மேலும் புளோரிடாவிலுள்ள ஒரு உணவகம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த உணவகம் முன்பு குவிந்தனர். அமெரிக்கர்கள் முகக்கவசம் அணிய மறுப்பதே வைரஸ் பரவல் தீவிரமடைய காரணமாக கூறப்படுகிறது. இத்தனை காலமாக முகக்கவசம் அணிய மறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முதன்முறையாக முகக்கவசம் அணிந்தார் என்பது குறிப்பிடதக்கது.