கொரோனாவால் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த வால்ட் டிஸ்னி மீண்டும் திறப்பு!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, ஃபுளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய ஆறுநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றால் இவை அனைத்தும் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதில் ஃபுளோரிடா மாகாணத்தில் மூடப்பட்ட வால்ட் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Disney World

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பூங்காவினுள் அனுமதிக்கப்படுகின்றனர். உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 35,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேளிக்கை பூங்காவை திருந்திருப்பது சுகாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நோய் பரவலை அதிகப்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.