ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்! மாடல் அழகி பகீர் குற்றச்சாட்டு

Trump

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் முன்னாள் மாடல் அழகி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமி டோரிஸ் எனப்படும் முன்னாள் மாடல் அழகி கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போது ட்ரம்ப் தவறாக நடந்துகொண்டார். தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும் புகார் அளித்துள்ளார். இதேபோல் கடந்த 2016 ஆம் அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திருந்தார். ட்ரம்ப் பலமுறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும், தேர்தல் சமயத்தில் அதை வெளியிடாமல் இருக்க அவரது வக்கீல் தனக்கு ரூ.92 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார். ட்ரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் பலனில்லாமல் போனது.

Trump

முன்னதாக 1990 ஆம் ஆண்டு பல்பொருள் அங்காடியில் ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுத்தாளர் ஜீன் கரோல் குற்றஞ்சாட்டியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்ரம்ப் மீது இப்படி அடுக்கடுக்கான புகார்கள் எழுதுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிபராவது ஏற்கனவே கேள்விக்குறியாக இருக்கும் சூழலில் அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் புகார் வந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான பாலியல் புகார்களை ட்ரம்ப் ஒரு முறை கூட ஏற்றுக்கொண்டது இல்லை மாறாக அனைத்தையும் மறுத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: டகோட்டாவில் சத்குரு! அமெரிக்க பூர்வகுடி மக்களின் வாழ்வை கண்டறியும் முயற்சி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter