தரைமட்டமான ட்ரம்ப் பிளாசா!

Trump plaza

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நடத்திவந்த 34 மாடிகள் கொண்ட கட்டடம் 3,000 கட்டுகள் கொண்ட வெடிப்பொருள் கொண்டு தகர்க்கப்பட்டது.

நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் 35 ஆண்டுகளுக்கு முன் ட்ரம்ப்பால் கட்டப்பட்டது ட்ரம்ப் பிளாசா.

614 அறைகள் கொண்ட இந்த கட்டடம் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. கேசினோ மற்றும் ஹோட்டல்கள் இங்கு இருந்தன.

1984 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டடம், முன்னாள் அதிபர் ட்ரம்பின் செல்வாக்கை உலகுக்குக் காட்டிய முக்கிய சொத்துக்களில் ஒன்றாகும்.

2014ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த கேசினோ பழுதடைந்தால் இந்த கட்டடத்தை ட்ரம்ப் விற்று வேறு ஒருவருக்கு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை வாங்கியவர் புதிதாக வேறு கட்டடத்தை கட்ட விரும்பியதால் இதனை இடிக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த கட்ட்டம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. கட்டடம் தகர்க்கப்படுவதைப் பார்க்க ஏராளமான மக்களும், ஊடகத்தினரும் கூடினர்.

3,000 வெடிப்பொருட்களைக் கொண்டு அந்த 34 மாடிக் கட்டடம் தகர்க்கப்பட்டது.

பழமையான அந்த கட்டடம் மணித்துளிகளில் சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.