அமெரிக்காவில் இருவேறு இடங்களில் பயங்கர துப்பாக்கிச்சூடு!

Shooting

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 4 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தது பொதுமக்கள் என போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Child, 4, Among 3 Injured In Times Square Shooting As Family Bought Toys

கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது
செய்யப்படவில்லை.

இதேபோல் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பல்டிமோர் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிசூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்த வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.