கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்!

doughnet

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Krispy Kreme said this week that it would give one glazed doughnut per day for the rest of the year to anyone who provides proof of a Covid-19 vaccination.

அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது வரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம் என்ற அறிவிப்பை அந்நாட்டில் உள்ள கிரிஸ்பி கீரிம் என்ற கடை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அட்டையை காண்பித்தால் இலவச டோனட்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை எத்தனை டோனட்ஸ் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம்,

இதனால் கடை முன் ஏராளமானோர் குவிய தொடங்கியுள்ளனர். டோனட்ஸ் மட்டுமல்லாது பாப்கார்ன், ஆல்கஹால் மற்றும் மரிஜுவானா ஆகியவற்றையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்,