வெள்ளை மாளிகையில் கறுப்புக்கும் முக்கியத்துவம்

Gianna-Floyd

வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளை சந்தித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆறுதல் கூறினார்.

மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட், கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி கள்ளநோட்டு வைத்திருந்தாக போலீஸ் வாகனத்தில் ஏற்ற காவல் அதிகாரிகள் முயற்சித்தனர்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். இதில் மூச்சுவிடமுடியாமல் ஜார்ஜ் உயிரிழந்தார்.

Call for reforms, assurance and Cheetos: Floyd's family meets Biden on George's death anniversary, World News | wionews.com

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இனவெறி அதிகரித்ததாக கூறி பிளாக் லைவ் மேட்டர்ஸ் குழுவினர் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

காவல் திகாரி டெரிக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவரை குற்றவாளி என அறிவித்த ஹென்னெபின் மாவட்ட நீதிமன்றம், 40-ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது

ஜார்ஜ் பிளாய்ட்டின் முதலாம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் மனைவி, சகோதரர் மற்றும் குழந்தைகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் பைடன், தொடர்ந்து தைரியமுடன் இருக்க வேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிளாய்டின் சகோதரர் பிலோனிஸ் பிளாய்ட்டு, “பைடன் எப்போதும் அவர் இதயத்திலிருந்து பேசுகிறார். எங்களை அழைத்து ஆறுதல் கூறியதற்கு நன்றி. இனவெறி தாக்குதலை அழிக்க ஒரு சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.