அமெரிக்காவில் 6 ஆம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கிச்சூடு

shooting

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதேபோல் கடந்த மாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த மாத இறுதியில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Shooting

இதனையடுத்து இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

அண்மையில் லூசியானா மற்றும் விஸ்கான் மாகாணாத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் வடமேற்கு அமெரிக்க மாநிலமான இடாஹோவில் உள்ள பள்ளி ஒன்றில், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது கண்மூடித்தமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி பல முறை சுட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்ததனர். ஆனால் அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது,

அந்த மாணவியிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய ஆசிரியர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்து எப்.பி.ஐ மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத் துறை விசாரணை நடத்திவருகின்றனர்.