2021 ஜூன் வரை வீட்டில் இருந்து வேலை செய்யலாம்: கூகுள்

கொரோனா பாதிப்பு காரணமாக கூகுள் நிறுவன ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.

கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று மற்றும் பொதுமுடக்கத்தால் அமெரிக்காவில் 11 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

Google

இதனிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்துள்ளன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது ஊழியர்களை இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021-ஆம் ஆண்டு ஜூன் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக கூகுள் மற்றும் ஆல்பபெட் (Alphabet )நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இமெயில் மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்களின் வாக்கு!