பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு-6 பேர் பலி

அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 43 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதேபோல் கடந்த மாத தொடக்கத்தில் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த மாத இறுதியில் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Man kills 6, then self, at Colorado birthday party shooting - ABC News

இதனையடுத்து இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

அண்மையில் லூசியானா, விஸ்கான்சிலில் துப்பாக்கிச்சூடு அரங்கேறியது.

இந்நிலையில் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது.

அங்கு புகுந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். தொடர்ந்து தானும் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

இறந்த ஒரு பெண்ணின் காதலன் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.