இந்தியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த அமெரிக்கா!

Harish Kotecha

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பரோபகாரர் ஹரிஷ் கோடெச்சா வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.

வீடில்லா குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அடைக்கலம் தரும் சேவையைச் செய்து வரும், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, ஹரிஷ் கொடோச்சாவுக்கு, அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

அவரது இந்து அறக்கட்டளை மூலம் தொண்டு நிறுவனம் மூலம், சமூக தொண்டாற்றி வருவதற்காக, அமெரிக்காவின் வீடில்லா குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்விக்கான தேசிய சங்கம் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் எதிர்காலம் உள்ளிட்டவற்றை உறுதிசெய்யும் ஹரிஷை கவுரவிக்கவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நிதி பெற்று வீடற்ற குழந்தைகளின் வாழ்வை செழுமையாக்கி, படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறார் ஹரிஷ். 11,000 க்கும் குறைவான வருமானம் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்து அறக்கட்டளை பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறது. இதுபோன்று தேசிய அங்கீகாரத்தை பெற்ற முதல் இந்திய அமெரிக்கர் இவரே ஆவார்.

ஹரிஷ்ஷின் பூர்வீகம் இந்தியா என்றாலும், குடும்பத்துடன் உகாண்டாவில் குடிபுகுந்த இவரை 1971 இல் அந்நாட்டு சர்வாதிகார அரசு வெளியேற்றியது. இதனையடுத்து அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். அமெரிக்காவுக்கு வந்த பின் நிதி மற்றும் வீட்டுவசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட இவர், தரமான கல்வி தகுதியை பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். தனக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த குழந்தைக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஹரிஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்றை நிறுவினர்.

இதையும் படிக்கலாமே: தாய் பால் கொடுத்தால் குழந்தைக்கு கொரோனா பரவுமா?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter