வெள்ளை மாளிகையை காலி செய்கிறார் ட்ரம்ப்

Trump

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் வெள்ளை மாளிகையை காலி செய்யும் பணியை அவர் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியே பல அட்டைப் பெட்டிகளை ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ட்ரம்ப் வேறு இருப்பிடத்திற்கு மாறும் பணியை தொடங்கிவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து வெளியேற உள்ளார்.

Stacks of boxes taken out of the White House complex on Thursday

இதற்கிடையில் பைடன் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு தலைநகர் வாஷிங்டனிலும் குறிப்பாக நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வாஷிங்டனுக்கு செல்லும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டன.

வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைடன் ஒரு சில நாட்களில் அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையை சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் தென்படுபவர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: நாடாளுமன்ற வன்முறையில் சிலரை பணயக் கைதியாக பிடிக்க திட்டம்?