தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – ட்ரம்ப்

TRUMP

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதன்முறையாக பொதுவெளியில் தோன்றி மக்களிடையே உரையாற்றினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடைபெறவிருகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஒன்றாம் தேதி உறுதியானது.

முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ட்ரம்ப், காய்ச்சல் அதிகமானதால், மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் 4 நாட்களில் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை. மேலும் ட்ரம்புக்கு நெகட்டிவ் என முடிவு வரவில்லை.

Donald Trump

இந்நிலையில் திடீர் திருப்பமாக வெள்ளை மாளிகை பால்கனியில் தோன்றிய அவர், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மாஸ்க்கை கழற்றிவிட்டு பேசிய ட்ரம்ப், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறினார். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க மக்களுக்கு அவை விரைவில் கிடைக்கும் என்றும் ட்ரம்ப் உறுதி அளித்தார். ட்ரம்ப் பொதுவெளியில் தோன்றினாலும் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தது தொடர்பாக, மருத்துவர்கள் ஏதும் கூறவில்லை.

இதனிடையே ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகடிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல ட்ரம்பும் தனது பரிசோதனை முடிவுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதுவரை ட்ரம்ப்பை சந்திக்க மாட்டேன், அவருடன் விவாதம் செய்ய மாட்டேன் என்றும் ஜோ பைடனும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: சீன வைரசை வென்று விட்டேன்; அது என்னை இனி தாக்காது- ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter