ட்ரம்பை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்- நான்சி பெலோசி

nancy pelosi

அமெரிக்காவில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்த அதிபர் ட்ரம்பை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவரும், ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினருமான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவது உயர் அவசரநிலை என்றும், இதுபோன்ற மிகவும் ஆபத்தான நபர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் 13 நாட்களில் நிறைவடையவிருக்கும் நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஜனநாயகக்கட்சி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 25 ஆவது திருத்தத்தின் பிரிவு 4இன் கீழ், ஒரு அதிபர் பதவி வகிக்க தகுதி இழந்துவிட்டதாக கருதினால் அவரை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்கலாம்.

அந்த பிரிவை ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ள நான்சி பெலோசி, அதிபர் ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குமாறு துணை அதிபர் மைக் பென்சை கேட்டுக்கொண்டுள்ளார். ட்ரம்பை அதிபர் பதவியிலிருந்து அமைச்சரவை நீக்கவில்லை என்றால் தனது தலைமையிலான பிரதிநிதிகள் சபை ட்ரம்பை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் அழுத்தமாக கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, உள்நாட்டு பயங்கரவாதிகள் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பைடனை வெற்றியாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கருப்பின ஆதரவு போராட்டக்காரர்கள்தான் நாடாளுமன்றத்தை தாக்கினார்கள் என சொல்லிவிடமுடியாது என்றும், அவர்கள் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப்பை கடவுளாக நம்பும் க்யூஅனான் மக்கள்! யார் இவர்கள்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter