டெக்சாஸை அச்சுத்துறுத்தும் ஹெனா சூறாவளி!

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு சூறாவளி ஒன்று உருவாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் கரையோரத்தில் நிலைகொண்டுள்ள புயல் சூறாவளியாக வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கு ஹெனா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

strom
இதன் காரணாமாக டெக்சாஸின் கிழக்கு பகுதிகளிலும் வடகிழக்கு மெக்சிகோவிலும் கனமழை கொட்டுத்தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் அட்லான்டின் சூறாவளியாகவும் வழக்கத்தை விட முன்னதாகவும் ஹெனா உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபொல் கடந்த 22 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa