எனக்கு பிடித்த உணவு இட்லி, சாம்பார் – கமலா ஹாரிஸ்

kamala harris

இட்லி, சாம்பார் மற்றும் டிக்கா ஆகியவை இந்திய உணவுகளில் தனக்குப்பிடித்தமானவை என்று அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸின்ன் தாய் சாமளா கோபாலன் சென்னையையும், தந்தை ஜமைக்காவையும் சேர்ந்தவர்கள்.

கமலா ஹாரிஸின் அம்மா வழி தாத்தா, மன்னார்குடியை சேர்ந்தவர். பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். எனவே கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற வேண்டுமென இந்தியர்கள் விரும்புகின்றனர்.

இதேபோல் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் சிலர் கமலா ஹாரிஸ்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்துவருகின்றனர்.

கலிபோர்னியா செனட் உறுப்பினரான 55 வயதாகும் கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும், முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் கறுப்பின பெண் என்பதால் அதிக கவனம் ஈர்த்துள்ளார்.

சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil) இவருடைய ரெசிபி Ilavarasi Vetri Venthan- குக்பேட்

இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு கமலா பதில் அளித்துள்ளார். அதில், விருப்பத்திற்குரிய உணவு பற்றி கமலா ஹாரிசிடம் எழுப்பிய கேள்விக்கு,

தென்னிந்திய உணவுகளில் இட்லி மற்றும் சுவையான சாம்பார் விருப்பமான உணவென்றும், வட இந்திய உணவு வகைகளில் எந்தவிதமான டிக்காவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தினமும் காலையில் உடற்பயிற்சி, குழந்தைகளுடன் பேசுவது, சமைப்பது போன்றவற்றால் தனது மனதை உற்சாகமாக வைத்திருப்பதாக கமலா தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்கள் முடிவுகளை எடுக்க யாரின் அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்பதே அவர்களுக்கான தனது அறிவுரை என்றும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே:  கொட்டும் மழையில் நடனத்துடன் பரப்புரை மேற்கொண்ட கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter