இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையை தீர்க்க நான் உதவி பன்றேன் – அதிபர் ட்ரம்ப்

இந்தியா சீனா இடையிலான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீனாவின் மோதல் போக்கை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே கடந்த சில மாதங்களாகவே இந்தியா சீனா எல்லை சச்சரவுகள் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு சாதகமாக பேசி வந்தார்.

Modi- Trump

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதை அறிந்துள்ளதாகவும் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ஜோ பிடன் அமெரிக்காவையே அழிக்க திட்டமிட்டவர் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa