சீன வைரசை வென்று விட்டேன்; அது என்னை இனி தாக்காது- ட்ரம்ப்

trump

கடந்த ஒன்றாம் தேதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால் ட்ரம்புக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மேரிலாண்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்பினார் அதிபர் ட்ரம்ப். அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த சில தினங்களில் அதிபர் ட்ரம்ப், தனது பரப்புரையை தொடங்குவார் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சீன வைரசை தான் வென்று விட்டதாகவும் இனி அது தன்னை தாக்காது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இத குறிதது ட்விட்டரில் பதிவிடடுள்ள அவர் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளதை உணர்வதாகவும் இது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கும் முன் ட்ரம்ப் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ட்ரம்ப்பிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவும் அபாயம் நீங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கோன்லி தெரிவித்திருந்தார். எனினும் ட்ரம்ப்பின் இப்பதிவை கொரோனா குறித்த தவறான தகவலாக இருக்க வாய்ப்புள்ள பதிவாக குறிப்பிட்டு அதற்கான விதிமீறல் குறியீட்டை ட்விட்டர் இட்டுள்ளது. முன்னதாக அதிபர் ட்ரம்ப் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் அளித்த பரிசு என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்கலாமே: இந்தியாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வணங்கியவர் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter