அமெரிக்க சுகாதாரத்துறை துணை அமைச்சராக திருநங்கை நியமனம்

Transgender

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் அமெரிக்காவில் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கையான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கைக்கு அமைச்சர் பதவி வழங்கி அதிபர் பைடன் சாதனை படைத்துள்ளார்.

திருநங்கை நியமனத்துக்கு குடியரசு கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ரேச்சல் லெவின்னுக்கு 52க்கு 48 வாக்குகள் கிடைத்ததையடுத்து துணை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

In A First, Transgender Woman Rachel Levine Confirmed To US Health Post

இவர் ஏற்கனவே பென்சில்வேனியாவின் சுகாதாரத்துறை செயலாளராகவும், சுகாதார அதிகாரிகள் சங்க தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார். இவர் ஒரு லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளும் இணையலாம் என்ற உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

அமெரிக்க ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை எனவும் பாலினத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.