அமெரிக்க அதிபர் பைடனின் உதவியாளராக இந்தியர் நியமனம்

maju-varghese

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Indian-American Maju Varghese Appointed Deputy Assistant To Joe Biden

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடன் களம் இறங்கியபோது, பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர்.

இறுதிவரை பைடனுனும், கமலா ஹாரிஸுடனும் இருந்த வர்க்கீஸ், இருவரும் பதவியேற்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் வர்க்கீஸ் தற்போது ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் கேரளாவை சேர்ந்த திருவல்லா தான் இவரது பூர்வீகமாகும்.

அமெரிக்க அதிபர் பைடன், தன்னை சுற்றி நிறைய இந்திய வம்சாவளியினரை வைத்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் தற்போது பல இந்தியர்கள் உயர் பதவியில் இருக்கின்றனர். இது அங்குள்ள இந்தியர்களையும், இந்தியாவில் உள்ளவர்களையும் கவரப்படுத்துவதாய் அமைகிறது.