இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் கிடைத்த கவுரவம்!

Mala Adiga

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றார்.

270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார்.

ஜனவரி 20 ஆம் தேதி புதிய அதிபராக பைடன் பதவியேற்கவிருக்கும் நிலையில், அதிகார மாற்றத்தை இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைப்பு அழைக்குமாறும் அதிபர் ட்ரம்ப்புக்கு அமெரிக்க அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.

Indian-American Mala Adiga appointed as Jill Biden's policy director | hrnxt.com

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பைடன் அதிகாரத்தை கைமாற்றும் குழுக்களை அமைத்தார். அதில் 20 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

ஜோ பைடன் அமைத்த கொரோனா பணிகளுக்கு அமைத்த மருத்துவக் குழுவிலும் இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர் அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவராவர்.

இந்நிலையில் தற்போது ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநர் பதவிக்கு இந்திய வம்சாவலி பெண்ணான மாலா அடிகா என்பவரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

சிகாகோ பல்கலைகழகத்தில் சட்டம் படித்த மாலா அடிகா, பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பணியாற்றியபோது கல்வி தொடர்பான திட்டங்களுக்கு உதவி செயலளாராகப் பணியாற்றியவர் ஆவார்.

இவர் ஜோ பைடனில் பிரசார வடிவமைப்பு குழுவிலும் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் கிடைத்த கவுரவம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts