அமெரிக்காவில் தனது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்தியர்!

Indian American

அமெரிக்காவில் தனது மனைவியை பொது இடத்தில் கொடூரமாக குத்தி கொன்ற இளைஞர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த இளைஞர் குறித்து தகவல் அளிப்போருக்கு ஒரு லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரை சேர்ந்தவர் பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் பட்டேல் (30). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹான்ஓவரில் உள்ள காபி ஷாப்பில் அவரது, மனைவி பாலக் என்பவரை கத்தியால் குத்தி கொன்றார்.

பாலக்கிற்கு வயது 21. இதனை அங்கிருந்த வாடிக்கையாளர்களும் காபி ஷாப்பில் பணியாளர்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரும் அந்த காபி ஷாப்பில் வேலை செய்து வந்த நிலையிலேயே கொலை நடந்தது.

தகவலறிந்தது நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பட்டேல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் பட்டேல் அதற்கு தலைமறைவானார்.

அவர் கடைசியாக நியூஜெர்சியில் உள்ள ஹோட்டலில் இருந்து டாக்சியில் வெளியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Indian-origin man in FBI '10 Most Wanted' list carries $100K reward

இந்த நிலையில் பட்டேலை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பு, அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்திய இளைஞர் பொது இடத்தில் மனைவியை கொலை செய்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பட்டேலை ஆபத்தானவனாக கருத வேண்டும் எனவும், அவரிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 10 கொடூர குற்றவாளிகளில் ஒருவராகவும் பட்டேல் அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிக்கலாமே: எங்கிட்ட அப்படி பேசாதீங்க- ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter