அமெரிக்க அதிபரின் மருத்துவக்குழுவில் ஈரோடு பெண்

Tamil women

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா கட்டுப்படுத்தும் குழுவில், ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட செலின்ராணி கவுண்டர் என்ற பெண் மருத்துவர் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வழிகாட்டுதல் குழு அமைத்துள்ளார்.

13 பேர் கொண்ட இந்த குழுவின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக ஈரோட்டை பூர்விகமாக கொண்ட பெண் மருத்துவர் செலின்ராணி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னதாக அமெரிக்க காநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள செலின்ராணி, நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-11-10-at-5.19.42-PM.jpeg
இதுகுறித்து ஈரோட்டில் வசித்து வரும் அவரது பெரியப்பா மகனான ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் தங்கவேல் பேசுகையில், செலின்ராணியின் தந்தை ராஜ் கவுண்டர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 1966ஆம் ஆண்டில் அமெரிக்க சென்று, போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி, அதன் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

மேலும், அவர் அமெரிக்க பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தொடர்ந்து அங்கேயே வசித்து வருவதாகவும், அவரது மூத்த மகள் தான் செலின் ராணி கவுண்டர் என்றும் தெரிவித்தார்.

மேலும், இவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றும், அவரது கணவர் கிராண்ட் ஊடகவியலாளராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

செலின்ராணி இதுவரை 4 முறை மொடக்குறிச்சி வந்துள்ளதாக தெரிவித்த தங்கவேல், ராஜ் பவுண்டேசன் என்ற பெயரில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே செலின்ராணி கவுண்டர் பெயர் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது, பெருமாபாளையம் கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே:  பதவியை இழக்கப்போகும் ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சரை நீக்கியதால் சர்ச்சை

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter