அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி வாக்களித்த இந்தியர்!

US presidential elections

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் களம்காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில்முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

ஆனால் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருகிறது. தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அஞ்சல் வாக்களிப்பில் பல்வேறு மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

US presidential elections

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது போலி வாக்கு அளித்த வழக்கில் இந்திய வம்சாவளி ஒருவர் சிக்கியுள்ளார். பைஜு பொட்டாகுலத் தாமஸ் எனும் இந்திய வம்சாவளி உட்பட 11 பேர் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி செய்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அவர்கள் மீது அமெரிக்க ஏஜென்சிகள், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் அபராதமும் ஒரு வருட சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியினர் உட்பட 11 பேரும் அமெரிக்க குடியுரிமையை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள நடப்பாண்டு அதிபர் தேர்தலிலும் இதுபோன்ற  மோசடிகள், வாக்கு சூறையாடல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மேலும் ஒரு கருப்பினரை கொன்ற அமெரிக்க போலீசார்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa