இந்திய வம்சாவளி சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு! வியந்து நின்ற அமெரிக்க விஞ்ஞானிகள்…

neha shukla

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்ததுடன் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்காவில் தற்போதுவரை 61 லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அவசியம் என கூறுகின்றனர் நிபுணர்கள். அதாவது பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியுடன் இருப்பது நோய் பரவலை தடுக்கும் என உலக சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 வயது சிறுமி நேகா ஷூக்லா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய தொப்பி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த தொப்பியை அணிந்திருப்பவர் பக்கத்தில், அதாவது கொரோனா சமூக விலகலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 அடி தூரத்தை கடைபிடிக்காமல், அருகே வந்தால், தொப்பி பீப் ஒலியையும், அதிர்வையும் ஏற்படுத்தி தொப்பி அணிந்திருக்கும் நபரை எச்சரிக்கும்.

இதனால், அவர் சுதாரித்துக்கொண்டு மற்றவர்களிடம் இருந்து விலகி சென்றுவிடலாம்.

neha shukla

அமெரிக்காவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகள், திறமைசாலிகள் அறிமுகம் என்ற நிகழ்ச்சியில் இந்த தொப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மூத்த விஞ்ஞானிகள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது இந்த ‘பீப் தொப்பி’.

கடந்த ஏப்ரம் மாதத்திலிருந்து முயற்சி செய்து பீப் தொப்பியை கண்டுபிடித்ததாக கூறும் நேகா, அல்ட்ரா சோனிக் சென்சார், மைக்ரோப் ராசசர், பஸ்சர், 9 வோல்ட் பேட்டரி ஆகியவற்றை கொண்டு உருவாக்கியுள்ளார்.

இந்த தொப்பிக்கு ‘சிக்ஸ் ஃபீட் அபார்ட்’ அலாரம் கேப் என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வேலைவாய்ப்பை உருவாக்கவும், வனத்தை பெருக்கவும் 855 மில்லியன் மரங்கள் வளர்க்க அமெரிக்கா திட்டம்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa