புலிட்சர் விருதை வென்ற இந்திய வம்சாவளி பெண் பத்திரிகையாளர்

Megha Rajagopalan

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலன் அமெரிக்காவின் புலிட்சர் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகளவில் பத்திரிக்கைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம்  ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

அமெரிக்காவின் உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது ஆண்டுதோறும் 21 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெறும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சான்றிதழ் மற்றும் 15,000 அமெரிக்க டாலர் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 105ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிகையாளர்கள் புலிட்சர் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவரான மேகா ராஜகோபாலன் அமெரிக்க இணையதள பத்திரிக்கையான பஸ்ஃபீட் நியூஸ் ((BuzzFeed News))நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்டவர்.

Indian-Origin Journalist Wins Pulitzer Prize For Exposing China's Detention Camps For Muslims

இவர் கடந்த 2017ம் ஆண்டு சீனாவின் சிறுபான்மையின மக்களான உய்குர் இன இஸ்லாமியர்கள் ((Uyghurs Muslim minorities)) ஜின்ஜியாங் பகுதியில்((Xinjiang region)) உள்ள தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை ஆதாரத்துடன் அம்பலபடுத்தினார்.

இதனையடுத்து தீரத்துடன் செயல்பட்டு ஜின்ஜியாங் தடுப்பு முகாம்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக சர்வதேச பிரிவிலான ஊடகவியலாளர் விருதை மேகா ராஜ கோபாலன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சீனாவின் உய்குர் இன இஸ்லாமியர்கள் குறித்து அவர் வெளியிட்ட பணிகளின் பின்னனி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

முதன்முறையாக சீனாவின் தடுப்பு முகாம்கள் குறித்து மேகா ராஜகோபாலன் செய்தி வெளியிட்டபோது அவரது கருத்துகளை முற்றிலுமாக சீன அரசு மறுத்தது.

அதுமட்டுமின்றி சர்வதேச பத்திரிகையாளரான அவரது விசாவை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது. இ

தனையடுத்து கட்டிடங்களின் செயற்கைக்கோள் படங்களின் தடயவியல் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற அலிசன் கில்லிங் ((Alison Killing )) மற்றும் கிறிஸ்டோ புஷெக் ((Christo Buschek)) என்பவருடன் சேர்ந்து இதுகுறித்தான ஆய்வில் ஈடுபட்டார்.

இவர்களது கூட்டு முயற்சியால் சீனாவில் 10 லட்சம் மக்களை 260க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்ததை ஆதாரத்துடன் உலகிற்கு வெளி கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளரான நெய்ல் பேடி ((Neil Bedi)) என்பவர் உள்ளூர் செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருதை பெற்றுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்டின் கொலையை தனது செல்பேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட டார்னெல்லா ஃபிரேசியர் ((Neil Bedi)) என்ற 18 வயதான இளம் பெண் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.