அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள சத்குரு மோட்டார் சைக்கிளில் பயணம்!

Isha Foundation founder
அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 15 மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
‘Of Motorcycles and a Mystic’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தை மஹாளய அமாவாசை தினமான செப்.17-ம் தேதி தொடங்கினார்.
டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா அறிவியல் மையத்தில் இருந்து புறப்பட்ட, அவர், லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட மாகாணங்கள் வழியாக சுமார் 6,000 மைல்கள் பயணித்து மீண்டும் டென்னிஸி வந்தடையவுள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு இந்த பயணத்தை சத்குரு மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
Image may contain: motorcycle and outdoor
அமெரிக்க பூர்வ இனக்குழுக்களின் உள்ளுணர்வுகளை பற்றியும், தனித்துவமான கலாசாரத்தையும் அறிந்துகொள்ளவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். அமெரிக்காவில் 45 லட்சம் பேர் அமெரிக்க மற்றும் அலாஸ்கா பூர்வகுடியின மக்களாக உள்ளனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.5 சதவீதம் ஆகும்.‘Sadhguru App’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சத்குருவின் பயணம் குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூர்வ மரபினை பற்றிய ஆய்வு பயணமாக சத்குருவின் பயணம் அமைகிறது. மேலும் அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மீகரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் மிகவும் உதவும் எனக் கூறப்படுகிறது.