அதிபர் பைடனின் செல்ல நாய் “சாம்ப்” உயிரிழப்பு

Champ

அமெரிக்க அதிபர் பைடன் அன்புடன் வளர்த்து வந்த 2 ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களில் சாம்ப் என்ற பெயர் கொண்ட நாய் உயிரிழந்தது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பதவியேற்றார்

தனது தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு இந்தியர்களை உயர் பதவிகளுக்கு பைடன் நியமித்துவருகிறார். மேலும் நிர்வாக பணிகளை தொடங்க சிறப்பான சில திட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.

78 வயதான பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். இதனால் பைடனின் பாதுகாப்பும், உடல்நிலையும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

First Lady Jill Biden pets one of the family dogs, Champ, after his arrival from Delaware at the White House in Washington

பைடன் சாம்ப், மேஜர் என்ற இரு நாய்களை செல்ல பிராணியாக வளர்த்துவருகிறார். ஒருமுறை மேஜர் என்ற நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் வளர்த்துவந்த சாம்ப் என்ற நாய் உயிரிழந்தது. இந்த நாய் தங்களுடன் 13 வருடங்கள் பாசமாக இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் பழகிய ஒவ்வொரு தருணங்களும் மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி மயமானவை என்றும் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த பைடன் இருந்த போது முதல், இந்த நாயை வளர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பைடன், “எங்கள் குடும்பம் இன்று அன்பான தோழர் சாம்பை இழந்தது. நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.