“முன்னேற்றத்தை நோக்கி அமெரிக்கா”

joe biden

கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் அமெரிக்கா முன்னேற்ற பாதையை நோக்கி நகர்வதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது. பைடன் அரசு எடுத்த அதிரடி தடுப்பு நடவடிக்கைகளாலும், தீவிர தடுப்பூசி விநியோகத்தாலும், தற்போதைய தினசரி பாதிப்பு 50 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முன்னேற்றம் நோக்கி நகர்கிறது

2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “கொரோனா தொற்று ஒரு நூற்றாண்டின் மிக மோசமான ஒன்றாகும்.

உள்நாட்டு போருக்கு பின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார மோசடி இந்த கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு.

கொரோனா வைரஸ் ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்திவிட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆபத்தைக்கூட சாத்தியமாக மாற்றியுள்ளது அமெரிக்கா.

1.8 டிரில்லியன் டாலர் முதலீட்டில் குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றுக்கான முன்னேற்ற திட்டங்கள், 2.3 டிரில்லியன் டாலர் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.