நவராத்திரி விழா: ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

Joe biden- kamala harris

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், துணை அதிப வேட்பாளர் கமலா ஹாரிஸூம் நவராத்திரி பண்டிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வெற்றிப்பெற இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இரு கட்சியினரும், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் நவராத்திரி பண்டிக்கைக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜோ பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில்,

இந்த பண்டிகையை கொண்டாடும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவருக்கும் நானும் எனது மனைவி ஜில் பிடனும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கமலா ஹாரிஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,

“எனது இந்து அமெரிக்க நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பண்டிகை நமது சமூகங்களை உயர்த்துவதற்கு நம் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுத்து புதிய அமெரிக்காவை உருவாக்கிட உதவட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொண்டதே நான் மட்டுமே. அமெரிக்காவை சிறப்பாக நிர்வகிக்கும் திறமை என்னிடமே உள்ளது. நானே அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே:  அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்: ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter