பெண்கள் மட்டுமே கொண்ட குழு! பைடன் அதிரடி

women team

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

women team
இந்நிலயில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், செய்தி தொடர்பு குழுவினரை அறிவித்துள்ளார்.

இக்குழுவில் உள்ள அனைவருமே பெண்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். தேர்தல் பரப்புரையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களையும், ஆலோசகர்களையும் தொடர்பு பிரிவு குழுவில் இணைத்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்னாள் பேச்சாளர் ஜென் சாகியை, வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளராகவும், தேர்தல் பரப்புரை பேச்சாளரான கேட் பேடீங்ஃபீல்ட் தொடர்பு பிரிவு இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணை அதிபராக கமலா ஹாரீஸ் எனும் பெண் தேர்வாகியிருக்கும் நிலையில் இப்படி ஒரு பெண்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஜோ பைடனுக்கு காலில் காயம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter