விமானத்தில் ஏறும்போது படிக்கட்டில் சறுக்கி விழுந்த பைடன்

biden

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார். தொடர்ந்து அதிபராகவும் பதவியேற்றார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறியபோது அதன் படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்தார்.

விமானம் மூலம் மேரிலாந்திலிருந்து அட்லாண்டா நகருக்கு செல்ல திட்டமிட்ட பைடன், விமானத்தின் படிக்கட்டுகளில் மேல் தளத்திற்கு சென்றார்.

அவர் படிக்கட்டுகளில் பாதிதூரம் ஏறிவிட்டநிலையில் தடுக்கி விழுந்து உடனடியாக எழுந்துவிட்டார். இதேபோன்று மூன்று முறை தடுமாறி விழுந்தார்.

இறுதியாக படிக்கட்டுகளில் ஏறி முடித்த அவர், கீழே நின்றிருந்த அதிகாரிகளிடம் கையசைத்துவிட்டு புன்னகைத்த படி, ராயல் சல்யூட் அடித்து உடனடியாக விமானத்திற்குள் நுழைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை பேச்சாளர், அதிபர் பைடன் 100% நலமாக இருக்கிறார். வெளியே பலத்த காற்று வீசியதால், விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறியபோது நானே சற்று நேரம் நிலைதடுமாறினேன் என்றும் அவர் தெரிவித்தார்.