அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்

Shalina

அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்பவரை நியமிக்க ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய சாலினா, 2007ஆம் ஆண்டு முதல் ஓக்லாண்ட் கவுண்டியிலுள்ள சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு முதல் அந்த மிச்சிகன் மாகாண உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார்.

Biden nominates 2 Michigan judges to federal courts

இவரை மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

பெடரல் மாவட்ட நீதிமன்றம் அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்கக் கூடிய நீதிமன்றம்.

அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இவர், 1993ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் 1996ஆம் ஆண்டு டெட்ராய்ட்-மெர்சி சட்ட பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர்.

இதையடுத்து 1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை சிவில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்