கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Joe Biden

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

டெலாவர் நகரில் உள்ள மருத்துவமனையில் ஜோ பைடனுக்கு ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து பேசிய அவர் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு ஊசி போடப்பட உள்ள நிலையில் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவில் ஃபைசரை தொடர்ந்து மாடெனா தடுப்பூசியையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த ஊசி முதன்முதலாக செவிலி ஒருவருக்கு போடப்பட்டது.

'Nothing To Worry About': Joe Biden Receives Vaccine Live On Television

கடந்த வாரம் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் அவரின் மனைவி கேரனும்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

இதேபோல் புதிய துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசர் தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே பைடப் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த வார இறுதிக்குள் ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இலக்கு கொண்டுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதையும் படிக்கலாமே: மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter