ஜோ பைடனுக்கு காலில் காயம்!

joe-biden-major

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

அதற்காக இப்போதிலிருந்தே சில முக்கிய முடிவுகளை எடுத்துவரும் பைடன், தனது தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்துவருகிறார். மேலும் நிர்வாக பணிகளை தொடங்க சில திட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.

அவரது திட்டங்களை செயல்படுத்த அதிபர் ட்ரம்ப் தடையாக இருந்துவருவதாகவும், அதனால் அவரால் சுதந்திரமாக ஆட்சியை வழிநடத்தவும் நிர்வாக ரீதியிலான முடிவுகளை எடுப்பது சவலாக இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பைடன் டெலவரில் உள்ள தனது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான மேஜர் என்ற நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.

Joe Biden: President-elect fractures foot while playing with dog - BBC News

இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், உடனடியாக எலும்பியல் சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து பைடன் வெளியே வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் அவருக்கு காயம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

பைடனுக்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதாக அவரது மருத்துவர் கெவின் ஓ கென்னாரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பைடனுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்றும், சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

78 வயதான பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். இதனால் பைடனின் பாதுகாப்பும், உடல்நிலையும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பைடன் கேம்ப், மேஜர் என்ற இரு நாய்களை வளர்த்துவருகிறார். இதனிடையே பைடனுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அறிந்த ட்ரம்ப், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பூங்காவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter