பட்ஜெட்டுக்காக அதிபர் பைடன் 6 டிரில்லியன் டாலர் பரிந்துரை

Biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6 டிரில்லியன் டாலர் பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பட்ஜெட் ஆண்டு வரும் அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்குகிறது.

இந்த ஆண்டு பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பட்ஜெட்டில் சமூக நலன், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், அறிவியல் மற்றும் மிகப்பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதிபர் பைடனின் இந்த பட்ஜெட் பரிந்துரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசாங்கச் செலவினம் ஆக உயர்வான நிலையை எட்டும்.

ஆனால் அதிபர் பைடனின் பரிந்துரைக்குக் குடியரசுக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் வட்டி விகிதமும் பணவீக்கமும் உயரக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சீனாவுடன் போட்டியிடுவதற்கான பட்ஜெட் இது என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக சீனா அமெரிக்காவுக்கு சவாலாக விளங்குவதாக அமெரிக்கா ராணுவத் தலைமையகம் பெண்டகன் தெரிவித்துள்ளது.

இந்தோ பசிபிக் மண்டலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக 85 எப்.35 ரக போர் விமானங்களை வாங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.